கட்டுரை செய்திகள்

முட்டாள்தனத்தைப் பரப்பும் முஸ்லிம்களை நினைத்து வெட்கப்படுகிறேன் – சிங்கள நடிகை


காத்தான்குடியிலுள்ள முஸ்லிம்கள் சிலர் எனது காணொளிகளால் வருத்தம் அடைந்திருப்பதால் இதனை எழுதுகிறேன்.

இது எமது இலங்கை, சவூதி அரேபியா அல்ல, எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம்.  காத்தான்குடியில் அமைந்துள்ள இப்பள்ளிவாசலைப் பார்வையிடப் பெண்களும் அனுமதிக்கப்படுவதை அறிந்து, உரியவர்களிடம் அனுமதி பெற்று இங்கு வந்தோம். இதற்குக் காரணம், இவ்வாறானதொரு இடத்தை நாம் பார்த்ததில்லை.

நான் ஒரு சிங்கள பௌத்தராக இருந்த போதும்,  இப்பள்ளிவாசல் உங்களது புனிதமான இடம் என்பதை  அறிந்து பார்வையிடச் சென்றேன், தனியாக அல்ல உங்கள் மதத்தைச் சேர்ந்த சில பெண்களுடனேயே. 

கொழும்பிலிருந்து மட்டக்களப்பிலுள்ள நண்பர்களைப் பார்க்க வந்தேன். அவர்கள் தங்கள் ஊரிலுள்ள மிக அழகான இடங்களைக் காட்டினார்கள். இன, மத வேறுபாடின்றி உண்டு, குடித்துவிட்டு மகிழ்ச்சியாக கொழும்பு திரும்பினோம். ஆனால், இவ்வீடியோவைப் பகிர்வதன் மூலம் இம்முட்டாள்தனத்தைப் பரப்பும் முஸ்லிம்களிடம், உங்களை நினைத்து நாங்கள் வெட்கப்படுகிறோம் எனக் கூற விரும்புகிறேன்.

ஒரு சிங்கள பௌத்த பெண் என்ற வகையில் என் நண்பர்களுக்கு மட்டக்களப்பு ஒரு அழகான இடம் என்று கூறிய நான் இப்போது மட்டக்களப்பில் இன,மத பேதங்களை கடைப்பிடிக்கும்  முட்டாள்கள் இருக்கிறார்கள் எனக் கூறுகிறேன். உங்களைப் போன்ற முட்டாள்கள் அழகிய ஊரின் சாபக்கேடு. 

பெண்களை வெறுக்குமாறு அல்லாஹ் கூறவில்லை என நான் நம்புகிறேன்.

ஏனென்றால் உங்கள் தாய் ஒரு பெண், உங்கள் மனைவி ஒரு பெண், உங்கள் மகள் ஒரு பெண், உங்கள் சகோதரிகள் பெண்கள். முதலில் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த உலகத்தின் இருப்பு பெண்ணைச் சார்ந்தது. நீங்கள் ஒரு தாயின் வயிற்றில் வளர்ந்து இந்த உலகத்திற்கு வருகிறீர்கள். அதை மறந்துவிடாதீர்கள், நீங்கள் உண்மையிலேயே கடவுளை மதிக்கிறீர்களா என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

நான் துபாயில் ஒரு மசூதிக்குச் சென்ற போது என்னிடம் யாரும் இவ்வாறு சொல்லவில்லை. உங்கள் மதத்தின் மாண்பை அழிக்காதீர்கள். நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும், ஒரே இரத்தம்தான், ஒரே நாடு தான், முட்டாள்தனமாக சிந்திக்காதீர்கள். நாங்கள் எந்த மதத்தையும் அவமதிக்கவில்லை. நாம் மரியாதையாகவே அங்கு சென்றோம், மற்றப்படி நான் ஒரு சிங்களவர் என்ற ரீதியில் தலையை மறைக்க வேண்டிய அவசியமுமில்லை.

இன்னொன்று, நீங்கள் கொழும்பில் எந்த ஒரு மதத் தலத்துக்கும் செல்லலாம், எவரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். வார்த்தைகளால் போர் கூட ஆரம்பிக்கலாம், எனவே கவனமாக இருங்கள். 

இந்த நாட்டில் 30 வருடங்களாக தமிழ் – சிங்கள யுத்தம் இருந்தது. மூன்று வருடங்களுக்கு முன் ஒரு நாள் கொழும்பில் குண்டு வெடித்தது, ஆனால் நாங்கள் ஒற்றுமையாக இருக்க முயற்சிக்கிறோம்.

உங்கள் மதத்தின் பெயரால் முட்டாள்தனத்தை பொய்யாக வெளிப்படுத்தும் நீங்கள் உங்கள் சொந்த மதத்தையும் தேசத்தையும் இழிவுபடுத்துகிறீர்கள். இப் பொய்யர்களை எண்ண வெட்கமாக இருக்கிறது, நன்றி.

இப்படிக்கு 

சிங்கள நடிகை இஷாங்கா அபேசேகர.

என்னை அகௌரவித்ததற்காக நாட்டின் சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த நாட்டிற்கு மேலும் பிரச்சினைகள் வேண்டாம் என்று யோசிக்கிறேன்.

ஆனால் எனது பாதுகாப்பிற்காக உங்களின் அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.

தயவுசெய்து புத்திசாலிகளாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

In Tamil: En. Aathmaa

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *