வறுமையின் காரணமாக மாணவி ஒருவர் மதிய உணவிற்கு தேங்காயை உட்கொண்டதாக கூறப்படும் சம்பவம் ஆதாரமற்றது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் எந்தவொரு குழந்தை / குடும்பத்திற்கும் உதவுவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவ்வாறான உதவிகளுக்கு 0114354647 என்ற அவசர உதவி இலகத்திற்கு அழைக்குமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.