செய்திகள்

குழந்தைகளுக்கு கொடுக்க உணவு இல்லையா..? 0114354647 அல்லது 0114354354 என்ற எண்களுக்கு அறிவியுங்கள்தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, நாட்டில் எங்கும் உணவு கிடைக்காத நிலையில் குழந்தையோ, நபரோ அல்லது குடும்பத்தாரோ இருந்தால், அவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில், ஜனாதிபதி அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்புத் திட்டப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், 0114354647 அல்லது 0114354354 மற்றும் 5705 / 5707 என்ற விஸ்தரிப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும்.

05க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள், ஊனமுற்றோர் மற்றும் நீண்டகால நோயாளர்களைக் கொண்ட குடும்பங்கள், 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட வறிய குடும்பங்கள், கணவன் அல்லது மனைவி இல்லாத குடும்பங்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களைக் கொண்ட குடும்பங்கள், ஆரம்பக் கல்வி கூட இல்லாத ஏழைக் குடும்பங்கள், கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்கள். உலக உணவுத் திட்டத்தின் கீழ் உதவி வழங்குவதற்கான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறான குடும்பங்களுக்கு மாதாந்தம் 15,000 ரூபாவை உலக உணவுத் திட்டத்தின் கீழ் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக வழங்க முடியும். முதல் 03 மாதங்களுக்கு பணம் வழங்கப்படும், அடுத்த 06 மாதங்களுக்கு உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இது தவிர, அரசு சார்பில் மாதாந்தம் 10,000.ரூபா 6 மாதங்கள் வரை வழங்கப்படும்

இவற்றில் அடங்காத குடும்பங்கள் இருப்பின் தற்போது உணவு கிடைக்காமல் தவிக்கும் குடும்பங்கள் இருப்பின் அவர்களுக்கு குறுகிய காலத்திற்கு உணவு வழங்க வாய்ப்பு உள்ளது . இது தொடர்பில் கிராம அலுவலர், அல்லது பிரதேச செயலாளர் ஊடாக ஜனாதிபதி செயலகத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டப் பிரிவுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும்..

மேலும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் இருந்தால், ஆய்வுகள் நடத்தப்பட்டு, அத்தகைய குடும்பங்களுக்கு அரசால் செயல்படுத்தப்படும் பெற்றோர் பாதுகாவலர் அமைப்பு போன்ற திட்டங்கள் மூலம் உணவு உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மேலும், பாடசாலை ஆசிரியர்கள் தலையிட்டு, உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படும் குடும்பங்கள் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தெரிவிக்கலாம், மேலும், அத்தகைய குடும்பங்களுக்கு உதவ விருப்பமும், திறனும் உள்ளவர்களும் இதில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

இது தவிர கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் இதனுடன் இணைத்து இந்த வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *