செய்திகள்

உளவியல் படித்த மாணவன் தற்கொலை செய்தது ஏன்..? சக மாணவர்கள் அதிர்ச்சிபேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலைவயில் நேற்று முன்தினம் இரவு குறித்த மாணவனின் சடலம் மகாவலி ஆற்றில் மீட்கப்பட்டது.

இந்த நிலையில் மாணவன் தங்கியிருந்த அறையில் சிறிய கடிதம் ஒன்றும் அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் “தற்போது நேரம் 8 மணியாகின்றது. இடையில் குறுக்கீடு இல்லை என்றால், அரை மணி நேரத்திற்குள் நான் மகாவலி ஆற்றில் இருப்பேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என எழுதப்பட்டிருந்தது.

அத்துடன் அவர் காணாமல் போன தினத்தன்று இரவு 7 மணியளவில் அவரது தாயார் தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட போது, அம்மா எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது என குறிப்பிட்டதாக உயிரிழந்த மாணவனின் தாயார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவனின் பிரேத பரிசோதனை நேற்று கண்டி தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றது. நீரில் மூழ்கிய போது ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மாணவன் மரணமடைந்துள்ளதாக சட்ட வைத்தியர் சிவ சுப்ரமணியம் உறுதி செய்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி அஞ்சன குலதுங்க என்ற 23 வயதுடைய மாணவன் காணாமல் போயிருந்த நிலையில் மீட்கப்பட்டது அவரது சடலம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் உளவியல் படித்த உளவியல் சங்கத்தின் தலைவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது அதிரிச்சியளிப்பதாக அவரது நண்பர்கள் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *