காத்தான்குடி அக்ஸா மஸ்ஜிதில் ஒரு சகோதர இன சகோதரி எடுத்துக் கொண்ட வீடியோ குறித்த மட்டரகமான சகல பதிவுகளும் உடனடியாக சமூக ஊடகங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும்!
இன்றைய ஜும்மாஹ் பிரசங்கங்களில் இந்த அறிவுரைகளை வழங்குமாறு அக்ஸா பள்ளி உற்பட அனைத்து பள்ளி சம்மேளனங்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
சில காமூக காடையர்கள் அந்த சகோதரியின் தனிப்பட்ட முகநூல் மற்றும் இன்ஸ்டகிராமில் உள்ள படங்களை திருடி இடும் பதிவுகளால் அம்மணமாக தம்மையும் தாம் சார்ந்த சமூகத்தையும் சன்மார்க்கத்தை யும் அசிங்கப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அக்ஸா மஸ்ஜிதையே இடித்து தரைமட்டமாக்குவதற்கு நிகரான அசிங்கமான காடைத்தனங்களால் மனம் நொந்து அந்த சகோதரி எழுதியுள்ள ஒரு மடல் தற்போது ஊடகங்களில் பிரசுரமாகிக் கொண்டிருக்கிறது.
பல்லின பலமத கலாசார தேசமொன்றில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு சகிப்புத் தன்மை பரஸ்பரம் தத்தமது சமய கலாசார பண்புகளை மதித்தல் குறித்து அதிகம் பேசுகின்ற இஸ்லாமியர் நாம் என்பதனை அறிவியல் ஆன்மீக பண்பாட்டு முதிர்ச்சியற்ற அடிமுட்டாள்கள் அறிவதில்லை போலும்!
தமது சகோதரிகள், பெண்பிள்ளைகள், மனைவியார், தாய்மார் தலைநகரில் (ஏன் அரைக் காட்சட்டைகளோடு சில ஆடவர்கள் புரியும் அசிங்கங்கள்) இவ்வாறு பின்தொடரப்பட்டு சமூக ஊடகங்களில் அசிங்கப் படுத்தப் பட்டால் எமது மனநிலை எவ்வாறு இருக்கும்.?
குறிப்பாக காத்தான்குடி, அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம், ஸஹ்ரான், உயிர்த்த ஞாயிறு என நீறுபூத்த நெருப்பாக இருக்கும் விவகாரங்களை இத்தகைய காடைத்தனங்கள் ஊதி உயிர் கொடுக்க எத்தனிப்பதாகவே தெரிகிறது!
*மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍🏻 23.09.2022 (Share)