அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த தனியார் பேருந்தின் பின் சக்கரங்கள் கழன்றதில் விபத்துக்குள்ளாக்கியது.
நேற்று (23) மாலை தொடங்கொட மற்றும் வெலிபென்ன நுழைவாயில்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேருந்தில் அதிகளவான பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்து
எனினும், இந்த விபத்தில் பயணிகள் எவருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்து முன்பக்க இரண்டு சக்கரங்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டன.