Uncategorized

நீண்ட காலத்தின் பின்னர் பொதுவெளியில் தோன்றிய கருணா -கோட்டாபய மீது கடும் விளாசல்


நீண்ட காலமாக பொதுவெளியில் தலை காட்டாமல் இருந்து வந்த விநாயகமூர்த்தி -முரளிதரன்(கருணா) தற்போது பொதுவெளியில் வந்து கோட்டாபயவை கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.


எவரது ஆலோசனையையும் கேட்காமல் அவர் எடுத்த முடிவால் நாடு தற்போது அதலபாதாளத்திற்குள் சென்றுள்ளதாகவும் நாடு தற்போது எதிர் நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடி சுமுக நிலைக்கு வருவதற்கு ஐந்து ஆண்டுகளாவது செல்லுமெனவும் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 புதிய இளைஞர் அணி கருணா அம்மான் படையணி என புதிய இளைஞர் அணி ஒன்றை உருவாக்கியுள்ளோம். காரணம் அடுத்து வரும் காலம் இளைஞர்கள் கையில் கொடுக்க வேண்டும். இன்று எமது நாடாளுமன்ற உறுப்பினர்களை தூக்கிச் சென்று நாடாளுமன்றத்தில் அமர்த்த வேண்டும்.

நடக்க முடியாத நிலையில் நாடாளுமன்றம் சென்று எவ்வாறு எமக்கு சேவை செய்யப்போகின்றார்கள்.

இந்த நிலையில் இளைஞர்கள் கையில் அடுத்த காலம் செல்ல வேண்டும். அதற்காகவே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து பயணிக்கின்றோம்.


யுத்தத்தின் வலிகள், பாதிப்புக்கள் எனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நானும் எனக்கான அண்ணன் ஒருவரை யுத்தத்தில் பறி கொடுத்துள்ளேன். அவ்வாறு நீங்களும் உறவுகளையும், அங்கங்களையும் இழந்து இன்றும் மாறாத வடுக்களுடன் வாழ்கின்றீர்கள்.

காலங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை

தொடர்ந்தும் கடந்த காலங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை. அவ்வாறு பேசுவதென்றால் நிறைய பேசக்கூடியதாக இருக்கும். அவற்றை விட்டுவிட்டு, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

அகில இலங்கை ரீதியில், மட்டக்களப்பை சேர்ந்த மாணவன் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதனை நாங்கள் பாராட்டியாக வேண்டும். அவ்வாறு கல்வியில் நாம் இன்றும் பின்னால் செல்லவில்லை. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் எவ்வாறு முன்னுக்கு வரலாம் என்பது தொடர்பில் நாங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.

நீண்ட காலத்தின் பின்னர் பொதுவெளியில் தோன்றிய கருணா -கோட்டாபய மீது கடும் விளாசல் | Karuna Appeared In Public After A Long Time

தவறான அதிபர் ஒருவரை தெரிவு செய்தமை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையானது இன்னும் 5 ஆண்டுகளுக்கு குறையப்போவதில்லை. தவறான அதிபர் ஒருவரை நாங்கள் தெரிவு செய்தமையால் இன்று நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குள் சென்றுள்ளது. மாற்றங்களை உருவாக்கலாம் என்ற நோக்கில் நானும் பின்னால் நின்றேன்.

எவரது ஆலோசனைகளையும் கேட்காது பல முடிவுகளை தன்னிச்சையாக எடுத்ததன் விளைவினை இன்று நாங்கள் அனுபவிக்க வேண்டி உள்ளது.

பசளைக்கு தடை விதித்தமையால் ஏற்பட்ட விவசாய உற்பத்தியின் பாதிப்பு பொருளாதாரத்தை சரிவடைய செய்தது.

அதனால், விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பினை சந்தித்தார். தொடர்ந்து பல பொருட்களிற்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் நாட்டின் பொருளாதாரம் படு வீழ்ச்சி அடைந்தது. மஞ்சளிற்கு விதிக்கப்பட்ட தடையால் 6000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.

 மக்கள் கிளர்ச்சி இவ்வாறு, பல்வேறு வகையில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினை இன்று நாங்கள் அனுபவித்து வருகின்றோம். அதனால் மக்கள் கிளர்ச்சி ஒன்று ஏற்பட்டு நாட்டை விட்டு கலைக்கப்பட்டு, எந்தவொரு நாடும் தஞ்சம் கொடுக்காத நிலையில் மீண்டும் நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.


எனவே, நாங்கள், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விடயங்களில் வடக்கு, கிழக்கு மக்கள் சிந்திக்க வே்ணடும். அதற்கான முன்னேற்றத்திற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *