Uncategorized

உலகில் மிகவும் மோசமான கழிப்பறையை தேடி 91 நாடுகள் பயணம் செய்த பிரித்தானியர்


உலகில் மிகவும் மோசமான கழிப்பறை

உலகில் மிகவும் மோசமான கழிப்பறை எங்குள்ளது என்பதை கண்டறிய பிரித்தானியர் ஒருவர் 91 நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள விநோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


அவர் தனது பயணத்தில் அந்த மோசமான கழிப்பறையை கண்டு பிடித்துள்ளதுடன் அது தொடர்பான புத்தகத்தையும் எழுதியுள்ளார்.




பிரிட்டனை சேர்ந்தவர் கிரஹாம் அஸ்கி (Graham Askey). 58 வயதான இவர் blog ஒன்றை நடத்தி வருகிறார். உலகத்தின் மிகவும் மோசமான கழிவறையை கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன் இவர் தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். ஏராளமான மலைப்பிரதேசங்கள், குக்கிராமங்கள், அசாதாரண வானிலை கொண்ட இடங்கள் என இவருடைய நெடும்பயணம் தொடர்ந்திருக்கிறது.

வெளியான புத்தகம்

இறுதியில் உலகின் மிகவும் மோசமான கழிவறையைஅவர் கண்டுபிடித்திருக்கிறார்.




இந்த பயணத்திற்காக கிரஹாம் அஸ்கி 150,000 பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1.3 கோடி ரூபாய்) செலவழித்திருக்கிறார். மோசமான கழிவறையை தேடும் படலத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்களை கொண்டு இவர் புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

அதில், தான் சந்தித்த வினோதமான கழிப்பறைகள் அனுபவம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகத்திற்கு ‘ரொய்லெட்ஸ் ஒஃப் தி வைல்ட் ஃபிரான்டியர்’ எனவும் பெயரிட்டிருக்கிறார்.

இதுபற்றி அவர் தெரிவிக்கையில்,”

நான் ஒருமுறை மொராக்கோவுக்கு சென்றபோது அங்கிருந்த கழிப்பறை கட்டுமானத்தின் மோசமான தன்மை என்னை ஈர்த்தது. அதனை தொடர்ந்து, விடுமுறை நாட்களில் உலகின் மோசமான கழிப்பறை எது என்பதை தேட நினைத்தேன். இந்த அனுபவத்தை ரொய்லெட்ஸ் ஒஃப் தி வைல்ட் ஃபிரான்டியர் என்ற புத்தகமாக எழுதியிருக்கிறேன்” என்கிறார்.

உலகில் மிகவும் மோசமான கழிப்பறையை தேடி 91 நாடுகள் பயணம் செய்த பிரித்தானியர் | Man Travels 91 Countries Search World Worst Toilet

கண்டுபிடிக்கப்பட்ட மோசமான கழிப்பறை




அதன்படி, தஜிகிஸ்தானின் அய்னி பகுதியில், பாமிர்ஸின் மேற்கு விளிம்பில் உலகின் மோசமான கழிப்பறை அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார் கிரஹாம் அஸ்கி. இதுபற்றி அவர் பேசுகையில்,”அதுதான் உலகத்தின் மோசமான கழிப்பறை. அதனை நரகத்தின் துளை என்று குறிப்பிட்டால் சரியாக இருக்கும். அதுபற்றி வார்த்தைகளில் விவரிக்கவே முடியாது. கழிப்பறையை சுற்றி துணிகள் மட்டுமே இருக்கிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால் அதையே கழிப்பறை காகிதமாகவும் மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். அதனை சுற்றி கொடிய பாம்புகளும் இருக்கின்றன. மக்கள் அதனை முழுமையாக பயன்படுத்தியது போல தெரிகிறது” என்றார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *