Uncategorized

சீனாவின் மற்றுமொரு பெறுமதிமிக்க அன்பளிப்பு – ஐபிசி தமிழ்


நடமாடும் ஆய்வுகூட பேருந்துகள்

சீன அரசாங்கம் 600 மில்லியன் ரூபா பெறுமதியான 08 நடமாடும் ஆய்வுகூட பேருந்துகளை இலங்கைக்கு இன்று (26) அன்பளிப்பு செய்துள்ளது.இலங்கைக்கான சீனத் தூதுவர் கியு ஷான்ஹொங் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் நடமாடும் ஆய்வுகூட பேருந்துகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.


அநுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, அம்பாறை, குருநாகல், திருகோணமலை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகங்களுக்கு சர்வதேச தரத்திலான இந்த சகல வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆய்வு கூடங்கள் வழங்கப்பட்டுள்ளன.


இந்த நடமாடும் வாகனங்களின் வசதிகள், இந்நாட்டில் உள்ள அடிப்படை வைத்தியசாலையொன்றின் ஆய்வுகூட வசதிகளைப் போன்றே அமைந்துள்ளன.

இது மின்சாரத்தால் இயக்கப்படுகிறது. ஆனால் மின்சாரம் இல்லாத பகுதிகளிலும், மின்சாரம் இல்லாத இடங்களிலும் சோதனை செய்யக்கூடிய ஜெனரேட்டர் வசதி உள்ளது.

சிறுநீரக நோயாளர்களை அடையாளம் காண முடியும்


இதன் மூலம் நாளாந்தம் சுமார் 500 பேரை பரிசோதிக்க முடியும் என்பதுடன், மாவட்ட மட்டத்திலும் உள்ளூராட்சி மட்டத்திலும் சிறுநீரக நோயாளர்களை அடையாளம் காண முடியும்.

இந்த நடமாடும் ஆய்வு கூடங்கள் கொவிட் போன்ற அவசர அனர்த்த சூழ்நிலைகளில் ஆய்வக பணிகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் பரிசோதனை பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அசங்க வி.ரணசிங்க குறிப்பிட்டார்.


இந்த நடமாடும் ஆய்வகங்களில் பயிற்சி பெற்ற சாரதி மற்றும் இரண்டு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்த முடியும்.

இதுவரை, நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் சுமார் 65,000 சிறுநீரக நோயாளிகள் காரணம் தெரியாமல் பதிவாகியுள்ளனர்.


இதேவேளை, சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 650 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களையும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியு ஷான்ஹொங் கையளித்தார்.

5 பில்லியன் ரூபா பெறுமதியான சீன மானியத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் 1வது தொகுதியாக இது இலங்கைக்கு வழங்கப்பட்டது.

இந்த நன்கொடையில் ரேபிஸ் நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் உட்பட 17 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடங்கும்.

சீனாவின் மற்றுமொரு பெறுமதிமிக்க அன்பளிப்பு | 8 Laboratory Buses From China


இங்கு உரையாற்றிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,
சுகாதாரத் துறைக்கு இத்தகைய உயர்ந்த நன்கொடைகளை வழங்கிய சீன அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான காலத்தை எட்டியுள்ள இவ்வேளையில் இந்த நன்கொடைகள் மிகவும் முக்கியமானவை என்றும் அமைச்சர் கூறினார்.

நெருக்கமாக சீனா

இலங்கையுடன் தமது தேவைகளை அறிந்த பல நட்பு நாடுகள் இருப்பதாகவும், சீனா அவர்களுடன் நெருக்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது பாரிய நன்கொடையாக இருந்தாலும் விலைமதிப்பற்ற பல சேவைகளை வழங்கும் உயர் பெறுமதி உள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.நெருக்கடிகளை எதிர்நோக்கும் எமக்கு உலகெங்கிலும் உள்ள நட்பு நாடுகளிடமிருந்து நாம் பெறும் ஆதரவு மிகவும் முக்கியமானது மற்றும் சரியான நேரத்தில் உள்ளது என்றும், 65 முதல் 70 ஆண்டுகளுக்கும் மேலான பழங்கால நட்புறவைக் கொண்ட சீனா, இலங்கையுடன் தொடர்ச்சியாக இருந்து வருவதாக அமைச்சர் கூறினார்.

சீனாவின் மற்றுமொரு பெறுமதிமிக்க அன்பளிப்பு | 8 Laboratory Buses From China


இங்கு உரையாற்றிய சீனத் தூதுவர் கியு ஷான்ஹொங்,உலகளாவிய தொற்றுநோய்கள் மற்றும் பிற நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் கடந்த சில வருடங்களில் இலங்கையின் சுகாதாரத் துறை மிகவும் திருப்திகரமாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும், சவால்களை எதிர்கொண்டும் இலங்கையின் சுகாதாரத் துறை வெற்றியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கைப் பிரஜைகளின் அர்ப்பணிப்பு, சகிப்புத்தன்மை மற்றும் முயற்சி என்பன இந்தச் சவால்கள் அனைத்தையும் வெற்றிகொள்வதற்கு முக்கியமாகும் என்றும், பொருளாதார நெருக்கடியிலும் வாழ்க்கைப் போராட்டத்திலும் அந்த சவாலான காலகட்டத்தைக் கடக்க முடியும் என்றும் அவர் கூறினார்.  Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *