Uncategorized

டொலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த பவுண்ட்..! இன்றைய நாணய மாற்று விகிதங்கள்


கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்க டாலருக்கு எதிராக ஸ்டெர்லிங் பவுண்ட் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.


இங்கிலாந்தின் மிகப்பெரிய வரிக் குறைப்புகளுக்கு சந்தைகள் எதிர்வினையாற்றியதால் ஸ்டெர்லிங் பவுண்ட் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலும் வீழ்ச்சி

 

இதேவேளை, இலங்கை மத்திய வங்கி இன்றைய நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.


இதன்படி, இலங்கையிலும் கடந்த வெள்ளியன்று 401.58 ரூபாவாக இருந்த ஸ்ரேலிங் பவுண்டின் கொள்வனவு பெறுமதி இன்று 376.70 ரூபா என பதிவாகியுள்ளது.


அத்துடன், கடந்த வெள்ளியன்று 417.39 ரூபாவாக இருந்த ஸ்ரேலிங் பவுண்டின் விற்பனை பெறுமதி இன்று 391.95 ரூபாவாக பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதி 

டொலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த பவுண்ட்..! இன்றைய நாணய மாற்று விகிதங்கள் | Pound To Dollar Exchange Rate Dollar To Lkr Cbsl

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.


இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 359 ரூபா 18 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 369 ரூபா 93 சதமாகவும் பதிவாகியுள்ளது.



அத்துடன், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 358 ரூபா 86 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு பெறுமதி 344 ரூபா 17 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Gallery



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *