உணவுகளின்றி பாடசாலை மாணவர்கள் தினந்தோறும் பாடசாலைகளில் மயங்கி விழுவதாக தேசிய மக்கள்
சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
ஒரு முட்டையை பெற்றுக்கொடுப்பதற்குக் கூட வசதியில்லாத நிலையில் இவர்கள் கோபுரங்களை அமைப்பதற்கே பணத்தை நாசம் செய்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
திரிபோஷா தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி தாய்மார்களுடன் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய சுகாதார அமைச்சுக்கு நேற்று (26) சென்றிருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலைகளில் மாணவர்கள் பட்டிணியால் மயங்கி விழுவது தொடர்பான முறைப்பாடுகள் தினந்தோறும் கிடைக்கின்றன.
ஒரு முட்டையை பெற்றுக்கொடுப்பதற்குக் கூட வசதியில்லாத நிலையில் இவர்கள் கோபுரங்களை அமைப்பதற்கே பணத்தை நாசம் செய்கிறார்கள். பிள்ளைகளுக்கு மூன்றுவேளை உணவுக் கிடைக்காத சந்தர்ப்பத்தில் திரிபோஷாவே அவர்களுக்குப் பிரதான உணவாக இருக்கிறது.
என்றார். எனவே, இது தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு சுகாதார அமைச்சர் அறிவிக்க வேண்டும். ஆனால் அதனை செய்யாது போலியான தகவல்கள் எனக்கூறி புறக்கணிக்க முடியாது.
பிள்ளைகளின் வாழ்க்கையோடு விளையாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார். திரிபோஷா தொடர்பில் தற்போது உருவாகியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எமக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதுபோன்ற பிரச்சினைகளை உருவாக்கி திரிபோஷாவை சந்தைகளில் இல்லாது செய்து வேறு எதனையும் கொண்டுவருவதற்கு சதி செய்கிறார்களா? என சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார்.