இன்றைய மின்வெட்டு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று 3 மணிநேரம் மின்துண்டிக்க இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு மின்வெட்டு காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பகலில் 01 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படும் எனவும் இரவில் 01 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.