Uncategorized

ஜப்பானில் இருந்து ரணில் விடுத்த அவசர உத்தரவு


கொழும்பு, பாலத்துரை, கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.


ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அதிபர், தீ விபத்து சம்பவம் குறித்து அறிந்துகொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு அதிபரின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்றிரவே பூர்த்திசெய்ய உத்தரவு


கொழும்பு அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் முப்படைத் தளபதிகள், தீயணைக்குப் பிரிவினர், சுகாதார அதிகாரிகள், உள்ளிட்ட அனைத்து அரசாங்கத் தரப்பினரையும் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான தேவைகளை இன்றிரவு முதலே பூர்த்தி செய்யுமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.


குறிப்பாக தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தாய்மார், பெண்கள், பிள்ளைகள் உள்ளிட்டோருக்கான தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பணிகள் ஆரம்பம்


அதிபரின் உத்தரவிற்கமைய, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகளை அதிபரின் செயலாளர் உடனடியாக ஆரம்பித்துள்ளார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *