தெமட்டகொட பகுதியில் பயணித்த தொடருந்து ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த தொடருந்தானது ண்டவாளத்தை விட்டு விலகி பழைய கட்டிடமொன்றுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக தெமட்டகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட புகையிரதமானது நிறுத்தல் வரம்பை மீறியதால் இந்த விபத்து ஏற்பட்டதோடு, இதனால் அருகில் உள்ள கட்டித்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்துக்கான விசாரணை
தொடரூந்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கான காரணமென விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் புகையிரத திணைக்களம் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவம் குறித்து எந்தவொரு நபரின் பெயர்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.