தங்கம்
பிலியந்தலை மகுலுதுவ பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நேற்று (27) பிற்பகல் இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்டுள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் அலமாரியில் இருந்த எழுபது பவுனுக்கும் அதிகமான தங்கம் மற்றும் யூரோக்களை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
அலமாரியின் இரகசிய பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த தங்கப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டுப் பணம் என்பன திருடப்பட்டுள்ளன திருட்டுச் சம்பவத்தின் போது அங்கு யாரும் இல்லை என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நன்கு அறிந்த நபர் அல்லது குழுவினர்
திருட்டுக்கு வந்தவர்கள் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாய்களின் கதவுகளை திறந்து அதனை வெளியே அனுப்பிவிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வீட்டை நன்கு அறிந்த நபர் அல்லது குழுவினர் இந்தத் திருட்டைச் செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர் உத்தியோகபூர்வ காவல்துறை மோப்ப நாய்கள் மற்றும் குற்றப் புலனாய்வாளர்களும் திருட்டு பற்றிய தகவல்களைக் கண்டறிய அனுப்பப்பட உள்ளனர்.
பிலியந்தலை காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் சனத் ரஞ்சித்தின் பணிப்புரையின் பேரில் குற்றத்தடுப்பு பிரிவின் கட்டளைத்தளபதி காவல்துறை பரிசோதகர் தினேஷ் ஹெட்டியாராச்சி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.