Uncategorized

தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்பை பார்வையிடச் சென்ற முஜிபுர் – கடும் மக்கள் எதிர்ப்பால் பரபரப்பு!


கொழும்பு  பாலத்துறை, கஜீமா வத்தை தீ விபத்து ஏற்பட்ட வீட்டுத் தொகுதிக்களை பார்வையிடச் சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தள்ளனர்.

இன்று காலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சென்ற போதே மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.



முஜிபுர் ரஹ்மான் வருகையை அடுத்து அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நீதி வழங்குமாறு மக்கள் கோரிக்கை

அத்துடன் குறித்த தீ விபத்தினால் வீடுகளை இழந்த தமக்கு நீதி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் கோரிக்கை விடுத்தனர்.


இருப்பினும் வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பான தீர்வுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கொழும்பு, கஜீமாவத்தை குடியிருப்பு தொகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இடம்பெயர்வு

தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்பை பார்வையிடச் சென்ற முஜிபுர் - கடும் மக்கள் எதிர்ப்பால் பரபரப்பு! | Sri Lanka Fire Accident Mujibur Rahman Colombo

தீயை அணைக்கும் பணியில் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் சிறிலங்கா கடற்படையின் 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த தீ விபத்தினால், உயிர்ச்சேதமோ அல்லது காயமோ எவருக்கும் ஏற்படவில்லை என்பதுடன், 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது களனி நதி விகாரை மற்றும் முவதொர உயன அடுக்குமாடி குடியிருப்பு சனசமூக மண்டபத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *