532 கோடி ரூபா வருமான வரி
532 கோடி ரூபா வருமான வரியை அரசாங்கத்திற்கு செலுத்தாத சம்பவம் தொடர்பில் பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸை எதிர்வரும் 03ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் டி. என். இளங்கசிங்க அழைப்பாணை விடுத்துள்ளார்.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலான அழைப்பாணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழக்கு
பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் 532 கோடி ரூபாவை (5,328,428,555/=) செலுத்தாமல் அரசாங்கத்திற்கு மோசடி செய்ததாகக் கூறி உள்நாட்டு இறைவரித் திணைக்களம், அதன் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.