இந்தியா, சிறிலங்கா மற்றும் நேபாளம் உட்பட இந்தோ-பசுபிக் முழுவதும் உள்ள நாடுகளுக்கு Climate Action for a Resilient Asia ஆதரவளிக்கும் என பிரித்தானியாவின் மூத்த அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பிரித்தானியாவின் £500 மில்லியன் புளூ பிளானட் நிதியம் சிறிலங்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், காலநிலைப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் உதவுகிறது என இராஜாங்க அமைச்சர் விக்கி ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா அர்ப்பணிப்புடன் செயற்படத் தயார்
அதுமட்டுமன்றி காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்ட 7 ஆண்டு கால, பிராந்திய இந்தோ-பசுபிக் திட்டமான காலநிலை நடவடிக்கையை Climate Action for a Resilient Asia தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைச் சமாளிப்பதற்கு சிறிலங்கா உட்பட அனைத்து நாடுகளுக்கும் ஆதரவளிக்க பிரித்தானியா முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
காலநிலை நிதியைத் திரட்டுதல், நீர் பாதுகாப்பை வலுப்படுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் உள்ளூர் தழுவல் முயற்சிகளை வழிநடத்த உதவுதல், £274 மில்லியன் வரை செலவழித்தல் ஆகியவற்றை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.