Uncategorized

தங்கத்தின் விலையில் திடீர் திருப்பம்! இன்றைய தங்க நிலவரம்


உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.



இதற்கமைய இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை கடந்த சில நாட்களிலும் பார்க்க இன்று (29) சடுதியாக அதிகரித்துள்ளது.

24 கரட் தங்கத்தின் விலை

அதன்படி, நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 590,627.00 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் இன்று 601,739.00 பதிவாகியுள்ளது.



மேலும், 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,230.00 ரூபவாகவும் 24 கரட் 8 கிராம் அதாவது ஒரு பவுன் தங்கத்தின் விலை169,850.00 ரூபவாகவும் பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலையில் திடீர் திருப்பம்! இன்றைய தங்க நிலவரம் | Gold Price In Sri Lanka Gold Price In World Market

அதேவேளை, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 19,470.00 ரூபவாகவும் 22 கரட் 8 கிராம் (ஒரு பவுன்) 155,700.00 ரூபவாகவும் அதிகரித்துள்ளது.



21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 18,580.00 ரூபவாகவும், 21 கரட் 8 கிராம் (ஒரு பவுன்) 148,650.00 ரூபவாகவும் பதிவாகியுள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *