காதலியின் மற்றைய காதலனை கொலை செய்ய வெடிகுண்டு கொண்டு வந்த இளைஞனை
அம்பாறை – எரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் முகநூல் சமூக ஊடகத்தின் ஊடாக குறித்த யுவதியை அடையாளம் கண்டு இருவருக்கும் இடையில் காதல் உறவை ஆரம்பித்துள்ளார்.
எனினும், பின்னர் சந்தேகமடைந்த பேஸ்புக் காதலருக்கு யுவதி வேறு இளைஞருடன் தொடர்பு வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த சந்தேகநபர், தனது காதலியுடன் உறவு வைத்துள்ள மற்றைய நபரை கொல்லும் நோக்கில் வெடிகுண்டுடன் அம்பாறை – எரகம பகுதிக்கு வந்துள்ளார்.
பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில் எரகம பொலிஸார் சந்தேக நபரை அவர் கொண்டு வந்த குண்டுடன் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று (29) அம்பாறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.