Uncategorized

ஒரேநேரத்தில் 200 அதிஷ்ட இலாப சீட்டுக்களை வாங்கி அனைத்திலும் கிடைத்த அதிஷ்டம்


ஒரேநேரத்தில் கிடைத்த அதிஷ்டம் 

அதிஷ்ட இலாப சீட்டை வாங்கி அதில் பரிசு பெற்றவர்கள் குறித்து அறிந்திருப்போம். ஆனால் ஒரே நேரத்தில் 200 அதிஷ்ட இலாப சீட்டுகளை வாங்கி அவை அனைத்திலும் பரிசு வென்ற நபர் தொடர்பில் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவிலேயே அப்படியொரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

அதிஷ்டத்தை பரிசோதிக்க முயற்சி


அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள அலெக்ஸ்சாண்ட்ரியா நகரை சேர்ந்தவர் அலி கெமி. இவர் நகரத்தை விட்டு வெளியேற நினைத்திருக்கிறார். அதற்கு முன்னர் தன்னுடைய அதிஷ்டத்தை பரிசோதிக்க விரும்பிய அலி, கடந்த 6 ஆம் திகதி, விர்ஜீனியாவில் உள்ள கடை ஒன்றில் 200 ஒரு டொலர் அதிஷ்ட இலாப சீட்டுக்களை வாங்கியுள்ளார்.

தான் வாங்கிய அனைத்து சீட்டிலுமு் ஒரே மாதிரியான நான்கு எண்களை உள்ளீடு செய்ய திட்டமிட்டிருக்கிறார் அவர்.



இதனையடுத்து, தன்னுடைய பிறந்த நாள் மற்றும் பிறந்த மாதம் ஆகியவை வரும் 0-2-6-5 என்ற எண்களை தான் வாங்கிய அனைத்து சீட்டுகளிலும் உள்ளீடு செய்திருக்கிறார் அலி கெமி.

பணப்பரிசும் கிடைத்தது

ஒரேநேரத்தில் 200 அதிஷ்ட இலாப சீட்டுக்களை வாங்கி அனைத்திலும் கிடைத்த அதிஷ்டம் | Man Buys 200 Lottery Tickets Same Drawing Wins

அதிர்ஷ்டவசமாக அவர் தேர்ந்தெடுத்த எண்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு சீட்டின் அதிகபட்ச பரிசு 5000 அமெரிக்க டொலர்கள். இதன்மூலம் கெமிக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் 8.1 கோடி ரூபாய்) கிடைத்திருக்கிறது. இதற்கான காசோலையையும் விர்ஜீனியா அதிஷ்ட நிறுவனம் அவருக்கு அளித்திருக்கிறது.  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *