Uncategorized

லிஸ் ட்ரஸின் மிகப்பெரிய வரிக்குறைப்பு திட்டம்! வரலாறு காணாத வீழ்ச்சியில் பவுண்ட்ஸ்


பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸின் மிகப்பெரிய வரிக்குறைப்பு திட்டங்கள் இந்த வாரம் கடும் பதற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.


இந்த வரிக்குறைப்பு திட்டங்களால் அந்நாட்டு நாணயமான பவுண்ட்ஸ் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சியை நோக்கி செல்கிறது.


அரசாங்கம் தனது நிதி திட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளால் பரவலாக பேசப்பட்டாலும் இந்த விடயத்தில் ” U ” வடிவ திருப்ப பேச்சுக்கே இடமில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பொருளாதார மந்த நிலை

இந்த திட்டம் மூலம் அரசாங்கம் அனைத்து அரச நிறுவனங்களையும் சீர்குலைக்க முயல்வதாக பிரித்தானிய வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி குற்றம் சாட்டியுள்ளார்.


அதேவேளை, ஐரோப்பாவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என உலக வங்கியின் தலைவர் இன்று(29) காலை எச்சரித்துள்ளார்.



இந்நிலையில், மீண்டும் இன்று பவுண்ட்ஸ் மற்றும் யூரோ நாணயங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்தி வீச்சு 




Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *