Uncategorized

சடுதியாக வீழ்ச்சியடைந்த வாகனங்களின் விலைகள்..! வாகனம் வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்


வீழ்ச்சி

நாட்டில் குறிப்பிட்ட சில வாகனங்களின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.



கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



வட்டி விகித அதிகரிப்பு மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக சில வாகனங்கள் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர தெரிவித்தார்.

குறைந்த விலைக்கு விற்பனை

இதன்படி, Suzuki Wagon R, Toyota Paso, Toyota Vitz, Toyota Axio, Toyota Premio, Toyota RACE, C.H.R, வெசல், கிரேஸ் போன்ற கார்கள் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனையாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


வாகனங்களின் விலைகள் குறைவடைந்துள்ள போதிலும், உதிரி பாகங்கள் மற்றும் வாகன பராமரிப்பு கட்டணங்கள் அதிகளவில் அதிகரித்துள்ளதாக குலதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *