இரண்டு பயணிகள் விமானங்கள் மோதல்
லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை காட்டும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
Icelandair மற்றும் Koreanair விமானத்திற்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புதன்கிழமை இரவு 8.06 மணிக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் இந்த சிறிய விபத்து நடந்ததாகவும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை
இந்த விபத்தில், பயணிகள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.மேலும் விமானங்களில் வருகை அல்லது புறப்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் பயணிகள் தங்கள் விமானங்களின் நிலையை தங்கள் விமான நிறுவனங்களுடன் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Korean Air flight surrounded by emergency vehicles at Londons Heathrow Airport after it chipped an Icelandic Air plane while taxiing on the runway Eyewitness describes how the plane came to halt and went dark after the incident#Air #flight #emergency #vehicles #Londons pic.twitter.com/zI1LXPSH1Y
— Shahryar Sultan (@Shahryar_Sultan) September 28, 2022
கொரியன் ஏர் விமானம் KE908 லண்டன் ஹீத்ரோவில் இருந்து இரவு 7.35 மணிக்கு சியோலுக்குச் செல்லவிருந்தது.
அப்போது, விமானம் நகர்த்தப்பட்டபோது ஐஸ்லாண்டேர் 767 ஜெட் விமானத்தில் விமானத்தின் பின்புற வால் பகுதியில் உரசியதாகவும், இது முழுமையான மோதல் அல்ல என்று நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறியுள்ளார்.
ஐஸ்லாண்டேயரின் வால் பகுதியில் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதைக் காட்டும் ஒரு படம் வெளியானது.
https://www.dailymail.co.uk/news/article-11260105/Emergency-services-race-scene-two-planes-collide-Heathrow-airport.html#v-1852616719133003539