ஐ.நா முன்றில் போராட்டம்
சிறிலங்காவில் சீன ஆதிக்கத்திற்கு எதிராக ஐ.நா முன்றலில் (ஜெனிவா) இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.
பிரித்தானிய அரசின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக, ஜனநாயக ரீதியில் மக்களை அரசியல் வழியில் தேசியம், சுயநிர்ணயம், தன்னாட்சி, என்ற அடிப்படையில், ஈழத்தமிழர் விடுதலையை வென்றெடுப்போம் எனும் தொனிப்பொருளிலும் போராட்டம் இடம்பெற்றது.
போராட்டக்காரர்கள், “நீதி வேண்டும் – நீதி வேண்டும் எங்களுக்கு நீதி வேண்டும்” என உரத்த குரலில் தெரிவித்ததுடன், சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான கொட்டெழுத்துக்களுடன் பதாதைகளும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
படங்கள்