சென்ற வாரம் கம்பஹாவில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்ற போது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது அறிந்ததே..
இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று காலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் கம்பஹா, அகரவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது கத்தியால் குத்தப்பட்டு 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியோரம் நடந்து சென்ற இரு பெண்களின் கைப்பைகளை திருட முற்பட்ட பெண் சந்தேக நபர் ஒருவரை பிடிக்க முற்பட்ட போதே சந்தேக நபர் அவரை கத்தியால் குத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபரையும் மற்றுமொரு நபரையும் கத்தியால் குத்திய பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதுடன், காயமடைந்த நபர் (படத்தில் உள்ளவர்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், சந்தேக நபர் பொலிஸாரை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டதையடுத்து, பொலிஸார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்த தாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கம்பஹா, கொட்டுகொட பிரதேசத்தில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.