Uncategorized

இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம்!


பல்கலை

இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார்.


பிலிப்பைன்ஸின் மணிலாவில் இன்று நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவருடனான சந்திப்பின் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


பிலிப்பைன்ஸில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமை அலுவலகத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவை அதிபர் இன்று சந்தித்தார்.

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார்.



கடந்த காலங்களில் இலங்கைக்கு வழங்கிய நிதி உதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு தனது நன்றியைத் தெரிவித்த அதிபர், எதிர்காலத்தில் நாட்டிற்கும் வங்கிக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு  பதிலளித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா, இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதாக உறுதியளித்தார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *