Uncategorized

சர்வதேச அளவில் ரணிலின் புதிய திட்டம்..!


உலகில் எந்தவொரு நாட்டு மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய வகையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளார்.


அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவிற்கும் (Masatsugu Asakawa) இடையிலான சந்திப்பு இன்று (30) ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்றது.


இந்த சந்திப்பின்போதே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ரணிலிடம் உறுதியளிக்கப்பட்டது 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கு சென்ற ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு வழங்கிய அவசர உதவிகளுக்காக இச் சந்திப்பின் போது நன்றி தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருப்பதாக அதன் தலைவர், அதிபரிடம் உறுதியளித்துள்ளார். 

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு, 




Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *