Uncategorized

மீண்டுமொரு சாம்பியன் பட்டம் வென்றது இலங்கை!


மாலைதீவில் இடம்பெற்ற தெற்காசிய மகளிர் கூடைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை வெற்றி வாகை சூடிக்கொண்டுள்ளது.


ஐந்தாவது தெற்காசிய மகளிர் கூடைப்பந்து போட்டியின் இறுதி போட்டிமாலைதீவின் தலைநகரான மாலேயில் நேற்று (30) நடைபெற்றது.


இந்த ஐந்தாவது லீக் சுற்றின் முக்கியமான இறுதிப் போட்டியில் மாலைதீவை வீழ்த்தி இலங்கை அணி அபராவெற்றியை பெற்றுக்கொண்டுள்ளது.

இறுதிப் போட்டி

தெற்காசிய பெண்கள் கூடைப்பந்து போட்டியில் 6 அணிகள் பங்கேற்றன. இதில் இலங்கை மற்றும் மாலைதீவு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.



முதல் பாதி முடிவில் இலங்கை அணி 46க்கு 22 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.



இரண்டாவது பாதியின் முடிவில் இலங்கையின் கூடைப்பந்தாட்ட வீரர்கள் 72 க்கு 59 புள்ளிகள் என முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

மீண்டும் சாம்பியன் பட்டம்  

மீண்டுமொரு சாம்பியன் பட்டம் வென்றது இலங்கை! | South Asian Women S Basketball 2022 Sri Lanka Win

தெற்காசிய பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாவது தடவையாகவும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அதேவேளை, கடந்த மாதம் இடம்பெற்ற ஆசிய துடுப்பாட்ட போட்டி மற்றும் ஆசிய கூடைப்பந்தாட்ட போட்டிகளில் இலங்கை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *