இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதம் பதிவாகியுள்ளது.
சிறிலங்காவின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்க விபரங்கள்
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி செப்டம்பர் மாத பணவீக்கம் 69.8 வீதமாக ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 64.3 வீதமாக பதிவாகியிருந்தது. இந்தநிலையில் ஒகஸ்ட் மாதத்தை விடவும் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 5.5 வீத அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
இதேவேளை உணவுப் பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 93.7 வீதமாக இருந்த நிலையில் செப்டம்பரில் அது 94.9 வீதமாக உயர்ந்துள்ளது.
உணவில்லாப் பொருட்களின் பணவீக்கம், 50.2 வீதத்தில் இருந்து 57.6 வீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் விலை அதிகரிப்பு
இலங்கையின் பணவீக்க அதிகரிப்பானது மேலும் பொருட்கள், சேவைகளின் விலை அதிகரிப்பையே எடுத்து காட்டுகிறது.
அத்தயாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை தற்போது மும்மடங்காக அதிகரித்துள்ள நிலையில், மேலும் விலை அதிகரித்தால் மக்களுக்கு கிடைக்கின்ற வருமானம் அதனை ஈடு செய்யாது எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.