எஸ்.எம்.எம். முர்ஷித்
வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையில் இருந்து முதலாவது தடவையாக மருத்துவ பீடத்திற்கு தெரிவான மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் வாழைச்சேனை ஹைராத் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம் பெற்றது.
வாழைச்சேனை ஹைராத் ஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவர் எஸ்.எம்.அமானுல்லாஹ்; தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பள்ளிவாயல் நிருவாகிகள் அந் நூர் தேசிய பாடசாலையின் பிரதி அதிபர்களான ஏ.எல்.இப்றாஹிம் மற்றும் எஸ்.எச்.பறூஸ், கணித விஞ்ஞான பிரிவுக்க பொறுப்பான ஆசிரியர் எம்.எம்.நவாஸ் மற்றும் ஊர் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையில் இருந்து முதலாவது தடவையாக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி பாடாலைக்கும் தனது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த அலாவுதீன் முஹம்மட் அப்ஸர் என்ற மாணவனை பள்ளிவாயல் நிருவாகத்தினர் நினைவு சின்னமும் பணப்பரிசும் வழங்கி கௌரவித்தனர்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித் )