அதிகரித்த விலைகள்
இலங்கையில் குடிகாரர்களுக்கு சோகமான செய்தியை வெளியிட்டுள்ளது அரசாங்கம்.
இதன்படி சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாவாலும் 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமுக பாதுகாப்பு வரி
140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் எதிர்பார்ப்பில் சமுக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அரசாங்கம் இன்று முதல் நமுறைப்படுத்தியுள்ளது.
இதற்கமையவே சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மேற்குறிப்பிட்ட வரி விதிப்பினால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் உயரும் என பொருளாதார நிபுணர்கள் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.