நாடாளுமன்றம் முற்றுகை
உணவு இல்லையெனத் தெரிவித்து பட்டினியால் வாடும் தாய்மார்கள் தமது பிள்ளைகளுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் நாள் வெகுதொலைவில் இல்லை என நடிகை திருமதி தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் அந்த தாய்மார்களுடன் தானும் நிற்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத அரசாங்கம் ஒரு இராஜாங்க அமைச்சரை பராமரிக்க இருபத்தெட்டு இலட்சம் செலவிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு முழுவதும் தீப்பற்றி எரியும்
இன்றைய பாடசாலை மாணவர்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை எனவும் சில பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் இன்று மிகவும் கோபமாக இருப்பதாகவும், எந்த நேரத்திலும் நாடு முழுவதும் தீப்பற்றி எரியும் என்றும், பின்னர் யாருக்காகவும் போராட எதுவும் இருக்காது என்றும் அவர் கூறினார்.