ஐ.நா அமர்வு
காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம் என நாங்கள் உறுதியாக உள்ள நிலையில் நடைமுறையில் நாம் நிரூபித்தவாறு ஓ.எம்.பியை மீண்டும் வலுப்படுத்த முயற்சிக்காதீர்கள் என ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை பேரவையில் நேற்று (30) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளர்.
தமக்கான நீதியை பெறுவதற்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களை இன்றைய முக்கிய செய்தியில் காண்க,