நீண்ட நாட்களாக உணவு கிடைக்கவில்லை என கூறி தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாதம்பே பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த தாய் இரண்டரை மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் வந்துள்ளார்.
கடற்றொழில் செய்து வரும் தனது கணவர் தன்னையும் பிள்ளைகளையும் கவனிப்பதில்லை எனவும் பிள்ளைகள் அடிக்கடி பட்டினியாக இருப்பதாகவும் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.