ரஷ்யாவிற்கு பேரிழப்பு
உக்ரைனில் நடந்து வரும் இதுவரையான போரில் ரஷ்ய படைகள் 60,000 வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைனிய ஆயுதப் படை மதிப்பிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி இறுதியில் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போரானது எட்டு மாதங்கள் கடந்தும் நிறைவடையாத நிலையில், தற்போது ரஷ்ய படைகளிடம் இழந்த பகுதிளை உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்தி மீட்டு வருகின்றன.
“Ever notice how you come across somebody once in a while you shouldn’t have f…ed with? That’s me.”
Walt KowalskiTotal combat losses of the enemy from Feb 24 to Oct 2: pic.twitter.com/YyrOY3ILaD
— Defense of Ukraine (@DefenceU) October 2, 2022
லைமன் நகர் மீட்பு
அந்த வகையில் 5000 வீரர்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லைமன் நகரை உக்ரைனிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி மீட்டுள்ளனர்.
இந்த அதிரடி மீட்பு நடவடிக்கையானது, கிழக்கு உக்ரைனின் மிக முக்கிய நான்கு நகரங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக ரஷ்ய அதிபர் புடின் அதிகாரபூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.
பாரிய போர் தளபாடங்களும் அழிப்பு
இந்நிலையில் உக்ரைனிய ஆயுதப்படை ஒக்டோபர் 2ம் திகதி வரையிலான இழப்பு மதிப்பினை வெளியிட்டுள்ளது, அதில் சுமார் 60,110 வீரர்களை ரஷ்ய படைகள் இழந்துள்ளதாக உக்ரைனிய ஆயுதப்படை மதிப்பிட்டுள்ளது.
அத்துடன் இந்த போரில் ரஷ்யா 2,377 தாங்கிகள், 264 போர் விமானங்கள், 227 ஹெலிகொப்டர்கள், 15 போர் கப்பல்கள் 4,975 கவச பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் 246 கப்பல் ஏவுகணைகள் ஆகியவற்றை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.