செய்திகள்

பாறூக் ஷிஹானுக்கு சிறந்த ஊடகவியளாளர் விருது


KDMC Nenasala Training Centre Kalmunai யின்  05வது பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம் ஹாஜா   தலைமையில்   நடைபெற்றது.

இப்பட்டமளிப்பு விழாவில் சுமார் 85 பட்டதாரி மாணவர்கள் பல்வேறு துறைகளிலும் பட்டம் பெற்றதுடன்,   பிராந்தியத்தில் ஊடகத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும்   பாறூக் ஷிஹானுக்கு   சிறந்த ஊடகவியளாளர் விருது   வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  இப்பட்டமளிப்பு விழாவிற்கு Colombo Lady Ridgeway Hospital for Children  வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளரும் கல்முனை அபிவிருத்திற்கும் முகாமைத்துவ சபையின் தலைவருமான வைத்திய கலாநிதி ஏ.எல்.எம் நஸீர்   பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். 

இப்பட்டமளிப்பு விழாவில்   பட்டதாரி மாணவர்கள் பெற்றோர்கள் அதிதிகள் என  பலரும் பங்குபற்றியயமை  குறிப்பிடத்தக்கதாகும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *