வைத்தியர்களுக்கு 60 வயதில் ஓய்வு
ஏனைய அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு 60 வயதில் ஓய்வு அளிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் சிறந்ததொரு தீர்மானம் எனவும் இளம் வைத்தியர்களின் தொழில் வாழ்க்கைக்கு இது சிறந்ததொரு முடிவு எனவும் அரச வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லான இன்று (2) தெரிவித்தார். .
60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ்ச்சியடையும் என சிலர் மேற்கொள்ளும் பிரசாரம் தவறானது என தெரிவித்த டொக்டர் ருக்ஷான் பெல்லான, நாட்டில் திறமையான இளைஞர்கள் அதிகளவில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
200 வைத்தியர்கள் ஆதரவு
சுமார் 200 வைத்தியர்கள் இந்த ஓய்வு முடிவை ஆதரித்து கடிதம் அனுப்பியுள்ளதாகவும், நாட்டில் நிபுணத்துவ வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது எனவும் டொக்டர் பெல்லானா தெரிவித்தார்.
கொழும்பு, காலி, கண்டி போன்ற பகுதிகளில் பணிபுரியும் சில விசேட வைத்தியர்கள் அந்த பகுதிகளை விட்டு வெளியேற தயக்கம் காட்டி ஓய்வூதியத்தை 63 ஆக உயர்த்துமாறு கோரி வருவதாகவும் இந்தக் கோரிக்கைக்கு அரசாங்கம் பதிலளிக்கக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.