Uncategorized

ஆட்சியை தன்வசம் வைத்துள்ள மகிந்த – கடும் அழுத்தத்தில் ரணில்


ஆட்சி

இலங்கையில் சமகால ஆட்சியில் பல்வேறு நெருக்கடிகள் காணப்பட்டாலும் மகிந்த ராஜபக்சவே ஆட்சியை தன்வசம் வைத்து்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அதிபராக தெரிவு செய்யப்பட்டாலும், அரச நிறுவனங்களிலும் அரச கூட்டுத்தாபனங்களிலும் அந்த கட்சியுடன் தொடர்புடைய எவரையும் நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு பதவிகளுக்கு தேவையானவர்களை நியமிக்கும் அதிகாரத்தை மகிந்த தன்வசம் வைத்துள்ளமையினால் அரசாங்கத்தில் உள்ளக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபருக்கு அவர் விரும்பிய வகையில் ஒரு கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை நீக்கவோ அல்லது நியமிக்கவோ முடியாத அளவுக்கு அழுத்தங்கள் பொதுஜன பெரமுன கட்சியினால் பிரயோகிக்கப்படுவதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அதிபரின் நிர்வாக திட்டமும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அதிபருக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விரைவில் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்,


  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *