பொறியியல் பீட மாணவன் மாயம்
பேராதனை பல்கலைக்கழக கலை பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்ற யக்கல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற மாணவன் காணாமற் போன நிலையில் மகாவலி ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் பேராதனை பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவன் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விடுதியிலிருந்து வெளியேறிய மாணவன்
இதன்படி பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் 25 வயதுடைய கடவத்தை, கணேமுல்ல பகுதியை சேர்ந்த மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
மாணவன் பேராதனை பல்கலையின் விடுதியிலிருந்து நேற்றிரவு வெளியேறிய நிலையில் விடுதிக்கு திரும்பவில்லை என பேராதனை காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.