செய்திகள்

சாய்ந்தமருது கடற்கரையில் சடலம் மீட்பு – மக்களின் உதவியை நாடும் பொலிஸார்– பாறுக் ஷிஹான் –


சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கடற்கரை பிரதேசத்தில்  மீட்கப்பட்டுள்ள    சடலம் தொடர்பில் அடையாளம் காண  பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியுள்ளனர்.


அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  பொலிஸ்  பிரிவில்  திங்கட்கிழமை(3)  காலை 40 வயது மதிக்கத்தக்க பெண்  குறித்த  சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.


பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த சாய்ந்தமருது  பொலிஸார்  கல்முனை கடற்படையினருடன் இணைந்து கடலில் மிதந்த  சடலத்தை மீட்டுள்ளதுடன் சடலம்  குறித்து  ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதனை தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனைக்காக  கல்முனை  வைத்தியசாலை சவச்சாலையில்  வைப்பதற்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.


குறித்த சடலம் தொடர்பில் ஏதாவது பொலிஸ் நிலையத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தால் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.


சுமார் 40 வயது மதிக்கத்தக்க குறித்த சடலம் தொடர்பில் அடையாளம் காணுவதற்கு பொலிஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *