விலை குறைப்பு
இம்மாதம் 5ஆம் திகதி (நாளைமறுதினம்) நள்ளிரவு முதல் லிட்ரோ உள்நாட்டு எரிவாயு கொள்கலனின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய விலை
எரிவாயு விலை சூத்திரத்தின்படி, உலக சந்தையில் எரிவாயு விலை மற்றும் இதர செலவுகளுக்கு ஏற்ப இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலைகள் விரைவில் அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.