சுற்றுலா பயணிகள் வருகையில் வீழ்ச்சி
கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 செப்டெம்பர் மாதத்தில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 21% குறைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
இதன்படி ஓகஸ்ட் 47,293 ஆக இருந்த சுற்றுலா பயணிகளின் வருகை செப்டெம்பர் மாதம் 29,802 ஆக குறைவடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA)தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு ஏற்பட்ட பின்னடைவு
வரவிருக்கும் குளிர்காலத்தில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தருவர் என்ற நம்பிக்கைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு பின்னடைவாகுமென தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்திய சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் சுற்றுலாத்துறை விசேட தூதுவர் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்யா இருவரும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.