மீளெடுப்பு
பிரித்தானியாவின் 45 பில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான வரிக் குறைப்பு திட்டங்களை அந்நாட்டு நிதி அமைச்சர் குவாசி குவார்ரெங் மீளப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த வரிக் குறைப்பு திட்டங்கள் பிரித்தானிய சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், டொலருக்கு எதிரான பவுண்ட்சின் பெறுமதியும் 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாரிய அளவால் வீழ்ச்சி கண்டிருந்தது.
திட்டங்களில் குறைப்பாடு
இந்த நிலையில் தமது வரிக் குறைப்பு திட்டங்களில் குறைப்பாடுகள் இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ள நிதி அமைச்சர் குவாசி குவார்ரெங், அதனை மீளப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
எனினும் நிதி அமைச்சர் பதவியில் இருந்து குவாசி குவார்ரெங் உடனடியாக பதவி விலக வேண்டும் என லிபரல் ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.