விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே இரவு வேளையில் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இது அவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் என அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர் மற்றும் ஒருவர் 45 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.அந்த விடயங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கின்றன.
உயிருக்கு பெரும் அச்சுறுத்தல்
ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால் சில இடங்களைக் காட்டுவதற்காக வசந்த முதலிகேவை இரவு நேரத்தில் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்வதுதான்.
சோதனை செய்யலாம் ஆனால் இரவு நேரத்தில்? இது உண்மையில் அவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது, இதைக் கவனியுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.