செய்திகள்

சனத் நிஷாந்தவை தண்டியுங்கள் – நீதவான்களும், நீதிபதிகளும் அங்கம் வகிக்கும் நீதிச் சேவைகள் சங்கம் மனுத் தாக்கல்



இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அவருக்கு தண்டனை வழங்குமாறு கோரி நீதிச் சேவைகள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.


போராட்டத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்தை முன்னிறுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இராஜாங்க அமைச்சர் சனத் சனத் நிஷாந்த வெளியிட்ட கருத்தின் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


அந்த கருத்தின் மூலம், நீதவானுக்கு உரிய அதிகாரத்தை அவர் சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் நீதிமன்றத்தின் கௌரவத்தை உதாசீனம் செய்துள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த செயற்பாடானது அரசியலமைப்பின் 105 ஆம் சரத்தின் கீழ் குற்றமாகும் என  நீதிச் சேவைகள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


நாட்டின் சகல நீதவான்களும் மாவட்ட நீதிபதிகளும் நீதிச் சேவைகள் சங்கத்தில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *