Uncategorized

வைச்ச குறி தப்பாது – உக்ரைன் சினைப்பர் வீரரால் வீழ்த்தப்பட்ட ரஷ்ய வீரர்


துல்லியமான சினைப்பர் தாக்குதல்

உக்ரைன் சினைப்பர் வீரரின் துல்லியமான தாக்குதலில் ரஷ்ய காலாட்படை வீரர் ஒருவர் உயிரிழந்து வீழும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.



போர் தீவிரமாக நடைபெற்று வரும் கிழக்கு உக்ரைனின் ஒரு பகுதியில், 550 மீட்டர் தொலைவில் நின்று கொண்டு இருந்த ரஷ்ய காலாட்படை வீரரை உக்ரைனின் துப்பாக்கி சுடும் வீரர் துல்லியமாக சுட்டு வீழ்த்தி உள்ளார்.




அத்துடன் இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைச்ச குறி தப்பாது - உக்ரைன் சினைப்பர் வீரரால் வீழ்த்தப்பட்ட ரஷ்ய வீரர் | Russian Soldier Downed By Ukrainian Sniper

புடினின் அறிவிப்பு








இதேவேளை ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் நான்கு முக்கிய நகரங்களில் வாக்கெடுப்பு நடத்திய நிலையில் அவற்றை ரஷ்யாவுடன் அதிகாரபூர்வமாக இணைக்கப்பதாக அதிபர் புடின் அறிவித்தார்.



ரஷ்ய அதிபர் புடினின் இந்த ஆக்கிரமிப்பு அறிவிப்பை தொடர்ந்து உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தற்போது கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனிய பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது.



புடின் அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த லைமன் நகரத்தை உக்ரைனிய ஆயுதப் படை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி மீட்டெடுத்தது.

மேலும் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்த தகவலில், அதிபர் புடினால் ரஷ்ய பகுதியாக அறிவிக்கப்பட்ட கெர்சன் நகரத்தில் உள்ள இரண்டு குடியேற்றங்களையும் உக்ரைனிய ஆயுதப் படை விடுவித்து இருப்பதாக அறிவித்தார்.   





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *