சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அறவிடப்பட்டமையை தொடர்ந்து கோதுமை மாவினை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கோதுமை மாவிற்கான விலையை அதிகரித்துள்ளன.
அதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவினை 13 ரூபாவினால் மீண்டும் அதிகரித்துள்ளது.
இதனால் ஒரு றாத்தல் பாணின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
டொலர்கள் இல்லாமை
எவ்வாறாயினும், கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கோதுமை மா இறக்குமதியாளர்களிடம் டொலர்கள் இல்லாமை காரணமாகவே கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கோதுமையுடன் துறைமுகத்தில் தேங்கியிருப்பதாகவும், அவற்றை விடுவித்தால் கோதுமை மாவின் விலை குறைவடையும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.