மற்றுமொரு நகரம் உக்ரைன் படை வசம்
உக்ரைனியப் படைகள் கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு முக்கிய கிராமத்தை விடுவித்து, மற்றொரு விரைவான ரஷ்ய இராணுவப் பின்வாங்கலை விரைவுபடுத்தியுள்ளன.
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம், கைப்பற்றப்பட்ட டேவிடிவ் பிரிட் மீது உக்ரைனிய கொடியை 35வது மரைன் படையணி ஏற்றியதைக் காட்டும் காணொளியை வெளியிட்டது, அருகிலுள்ள பல கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தீவிரமடைந்துள்ள தாக்குதல்கள்
உக்ரைனின் வடகிழக்கில் ரஷ்யப் படைகள் ஏற்கனவே பின்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
தற்போது தெற்கிலும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நான்கு உக்ரைனிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ஆணைகளை நடைமுறைக்குக் கொண்டுவரவிருந்த நிலையில் உக்ரைனிய படைகளின் தாக்குதல்கள் தீவிரம் பெற்றுள்ளன.
இந்த இணைப்புக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் எந்த சட்டபூர்வத்தன்மையும் இல்லை என்பதுடன் உக்ரைனின் அதிபர் வெலோடிமிர் ஜெலென்ஸ்கி அவற்றை செல்லாது என்று அறிவித்தார்.