17 வயது மாணவியின் பாலியல் விடயங்கள் அடங்கிய வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20, 23 மற்றும் 24 வயதுடைய சந்தேகநபர்கள் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காணொளியை பாதிக்கப்பட்ட பெண் தனது காதலனுடன் பகிர்ந்துள்ளதாகவும், அவர் அதனை தனது நண்பர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், நண்பர்கள் பின்னர் சமூக ஊடகங்களில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் மொனராகலை பண்டாரவாடிய, பட்டியாலந்த மற்றும் மகந்தனமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்